• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முருங்கைக் கீரை கேழ்வரகு அடை

November 6, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 250 கிராம்
வெங்காயம் – 4 (பொடியாக)
பூண்டு – 10
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
முருங்கைக் கீரை – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டை நசுக்கியது, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பின் சிறிதளவு நீர் விட்டு பிசையவும். பிசைந்த மாவு சிறிது நெகிழ்ச்சியாக, குழைவாக இருக்க வேண்டும். வடைமாவு போல் அளவான நீரில் கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை, மூடியின் பின்புறத்தில் ஒரு துணியை போட்டு அடை போல தட்டி, அதை தோசைக்கல்லில்போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும். சத்தான முருங்கைக் கீரை கேழ்வரகு மாவு அடை தயார்.

குறிப்பு: இந்த அடையை காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும். சர்க்கரையுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இதனை கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்துமாவு போன்றவற்றிலும் இந்த அடையை தயாரிக்கலாம்.

மேலும் படிக்க