• Download mobile app
25 Jul 2024, ThursdayEdition - 3088
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதாம் சூப்

May 18, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

பாதாம் – 1/4 கப்

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு – 4 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 4 கப்

பால் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

மிளகு தூள் – 1/8 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

குங்குமப்பூ – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பாதி பாதாமை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். மீதமுள்ளதை பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கி வைத்துள்ள பாதாமை சேர்த்து பொன்னறிமாக வறுக்க வேண்டும்.

பின்பு அதில் சோள மாவு சேர்த்து லேசாக கிளறி,பின் தண்ணீரை மெதுவாக ஊற்றி தொடர்ந்து கெட்டி சேரவிடாமல் கிளறி,நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவையான நன்கு கொதித்ததும்,அதில் பால் சேர்த்து அரைத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து, உப்பு,மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி,தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி,மேலே குங்குமப்பூவை தூவினால்,சுவையான பாதாம் சூப் ரெடி!!!

மேலும் படிக்க