• Download mobile app
12 Jun 2026, FridayEdition - 3775
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பப்பாளி பழத்தில் அல்வா செய்ய தெரியுமா…?

February 11, 2019 tamil.webdunia.com

தேவையானப் பொருட்கள்:

பப்பாளி பழ துண்டுகள் – 3 கப்
சர்க்கரை – 3/4 கப்
நெய் – 4 தேக்கரண்டி
பால் – காய்ச்சியது 1/2 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7

செய்முறை:

முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். அதிகம் பழத்த பழமாக இல்லாமல் சற்று காய் பதத்தில் எடுத்து கொள்ளவும். பாதாம், முந்திரி பருப்புகளை மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு வேக விடவும். பப்பாளி நன்கு குழைந்து வரும் அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். அல்வா சுண்டி வரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவிடவும்.

பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொழுது முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் தூவி கிளறி இறக்கவும். சுவையான பப்பாளி அல்வா தயார்.

மேலும் படிக்க