• Download mobile app
03 Aug 2021, TuesdayEdition - 2001
FLASH NEWS
  • பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
  • ரூ.1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்
  • பெகாஸஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா? – ராகுல் காந்தி
  • தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • திருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு
  • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
  • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
  • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
  • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

ஜீரணத்துக்கு ஏற்ற இஞ்சி குழம்பு செய்ய…!!

January 10, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
வெங்காயம் – 3
புளி – சிறிதளவு
பூண்டு – 20 பல்
இஞ்சி – 25 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயம் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிதளவு
செய்முறை:

முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும். நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார். இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க