August 16, 2018
awesomecuisine.com
தேவையான பொருட்கள்:
நூடல்ஸ் – கால் கப் (உப்பு போட்டு வேகவைத்த நூடல்ஸ்)
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
கொத்தமல்லி ஜூஸ் – அரை கப்
பீன்ஸ் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)
கேரட் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)
ஸ்வீட் சோளம் – இரண்டு டீஸ்பூன்
எலுமிச்சை பழம் சாறு – ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி அதில் வேகவைத்த நூடல்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி எடுத்து கொள்ளவும்.அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்,பீன்ஸ்,கேரட், ஸ்வீட் சோளம் சேர்த்து நான்கு நிமிடம் வதக்கி,இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
காய்கள் வெந்ததும் வேகவைத்த நூடல்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டிய கொத்தமல்லி சாறு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு மிளகு தூள்,சீரக தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கலக்கி பரிமாறவும்.