தேவையான பொருள்கள்
கொள்ளு – 200 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் -15
நறுக்கிய தக்காளி – 4
நறுக்கிய பச்சைமிளகாய் – 5
நறுக்கிய இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
கடுகு – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 2
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
புளி -நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 1 குழம்பு கரண்டி அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கொள்ளை நன்கு சுத்தம் செய்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து, குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.
பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்தமிளகாய் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதனுடன் கொள்ளு, தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.
சுவையான சத்தான கொள்ளு குழம்பு ரெடி
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்