• Download mobile app
17 Jun 2024, MondayEdition - 3050
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கறிவேப்பிலை மீன் வறுவல்

June 6, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

பாம்ஃப்ரெட் மீன் (Pomfret Fish) – 1 பெரிய கையளவு
தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அரைப்பதற்கு…

கறிவேப்பிலை – 1 கையளவு
மிளகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2-3
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் – 3-4
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 3-4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த மசாலாவை மீனில் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தவா அல்லது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை வைத்து, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!

மேலும் படிக்க