• Download mobile app
23 May 2024, ThursdayEdition - 3025
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரிசி சாத கட்லெட்

October 22, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

அரிசி சாதம் – 1 கப்.
வேக வைத்த உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து மசித்தது).
மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) – 1 கப் (பொடியாக நறுக்கியது).
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது).
இஞ்சி – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது).
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது).
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்.
கொத்தமல்லி – சிறிது.
உப்பு – தேவையான அளவு.
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்.
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்.
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்.
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்.
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அரிசி சாத கட்லெட் ரெடி!!!

மேலும் படிக்க