May 15, 2018
தண்டோரா குழு
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன்(71) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
கடும் மூச்சுத்திணறல் காரணமாக எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவர் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200க்கும் மேற்பட்ட நெடுங்கதைகள் எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்றுள்ள பாலகுமாரன், இலக்கிய சிந்தனை விருதும் பெற்றுள்ளார்.
இதுமட்டுமின்றி,பாலகுமாரன் நாயகன்,பாட்ஷா,சிட்டிசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.மேலும்,இயக்குனர் பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
பாலகுமாரன் இரும்பு குதிரை என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.