November 23, 2017
தண்டோரா குழு
நடிகரும் இயக்குனருமான சசிக்குமாரின் உறவினர் தயாரிப்பாளர் அசோக் குமார் அன்புச்செழியனின் கந்து வட்டி கொடுமையால் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் அன்புச்செழியன் மீது அனைவரும் கடுமையாக விமர்சனம் செய்து வருக்கின்றனர். இதற்கிடையில், இயக்குனர் சீனு ராமசாமி அன்புச்செழியனின் உத்தமன் என்று டுவிட் செய்து இருந்தார்.இந்நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அன்புச்செழியனினுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “6 வருடமாக அன்புச்செழியனிடம் பணம் பெற்றுத்தான் படம் எடுத்து வருகிறேன். என்னிடம் அவர் முறையாகத்தான் நடந்துகொள்கிறார். அன்புச்செழியனை அனைவரும் மிகைப்படுத்தி சித்தரிப்பதாகத் தோன்றுகிறது.எனக்கும் கடன் இருக்கிறது உழைத்துக் கொண்டிருக்கிறேன் RIP அசோக் குமார் என்று கூறியுள்ளார்.