ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’ படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
சாமி படத்தைத் தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படங்களாக இயக்கி வந்த ஹரி, தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்தப் படத்திலும் விக்ரம் ஆறுச்சாமி கேரக்டரிலேயே நடிக்கிறார்.முந்தைய கதையின் தொடர்ச்சியாகவே ‘சாமி 2’ கதையும் அமைந்திருப்பதாகப் கூறப்படுகிறது.
மேலும், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த த்ரிஷாவுடன் இணைந்து மற்றொரு நாயகியாக இப்போது கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார். இதற்கிடையில் படத்தில் கீர்த்தி சுரேஷை விட தனக்கான கதாபத்திரம் குறைவு என்பதால் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், மகள் திருமணத்தில் பிசியாக இருந்த நடிகர் விக்ரம் தற்போது திரிஷா வீட்டிற்கு சென்று அவரை சமாதானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் த்ரிஷா மீண்டும் சாமி 2 படத்தில் இணைவார் என தெரிகிறது.
மேலும், கடந்த வாரம் ‘சாமி 2’ படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் அவருக்கு பதில் யார் ஒளிப்பதிவு செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்