January 10, 2017
tamilsamayam.com
அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் “தல 57” படத்தின் பாடல்கள் சிங்கப்பூரில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரம்,வேதாளம் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார்,சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன்றாவது படம் “தல-57”.வேதாளம் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதால்,படத்தின் பாடல்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்னோட்டமாக படத்தின் ஒரு பாடலை மட்டும்,சிங்கப்பூரின் டின்செல் நகரில் நடைபெற உள்ள அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தல -57 படத்தில் பிரபல தமிழ் ராப் பாடகர் யோகி பாடியுள்ள பாடல் சிங்கப்பூரில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் இந்த தகவல்களை தல 57 படக்குழு,தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.