• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

January 25, 2017 tamilsamayam.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி 25ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்றது.

தலைவராக எஸ்.தாணுவும், பொதுச்செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோரும், துணைத் தலைவர்களாக பைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல்.தேனப்பன் ஆகியோரும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்கள்.இவர்களின் பதவிக் காலம் இன்றுடன் (ஜனவரி 25) முடிவடைகிறது.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வருகிற மார்ச் 5ஆம் தேதியன்று நடைபெறும் என்று தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அறிவித்துள்ளார். இந்த திடீர் ஒத்திவைப்புக்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க