September 12, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவை பொறுத்தவரை படத்திற்காக முன்னணி நடிகர்கள் சிக் பேக் வைத்து நடிப்பார்கள்.ஆனால்,படத்திற்காக எந்த ஒரு காமெடி நடிகரும் சிக் பேக்ஸ் வைத்து நடித்ததில்லை.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,சமந்தா,சிம்ரன்,சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் சீமாராஜா.இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது.இந்நிலையில்,சூரியின் சிக் பேக்ஸ் புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில்,சூரி 8 மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்து இந்த சிக் பேகை கொண்டு வந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால்,சீமாராஜா படத்தில் வரும் அரசர் காலத்து காட்சிகளில் சூரி சிக் பேக்ஸ்டன் வருவார் என தெரிகிறது.கதைக்கு சிக்பேக்ஸ் தேவை என படக்குழுவினர் விளக்கியதும் எவ்வித மறுப்பும் இல்லாமல் சிக் பேக்ஸ் வைத்து விடுகிறேன் சூரி கூறியுள்ளாராம்.சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள சூரியின் சிக்பேக்ஸ் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.பலரும் சூரியை பாராட்டி வருகின்றனர்.