• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎம்டபிள்யூ பைக்குடன் சிம்பு.!

November 15, 2017

நடிகர் சிம்பு, பிஎம்டபிள்யூ பைக்குடன் வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இளைஞர்களுக்கும் பைக்குகளுக்கும் மத்தியில் எப்போதுமே தீராத காதல் உண்டு. அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டு பைக் என்றால் கேட்கவே வேண்டாம். எவ்வளவு பணம் ஆனாலும் செலவழித்து வாங்கி ஒரு கலக்கு கலக்கி விடுவார்கள்.

தற்போது இளைஞர்கள் மத்தியில் வெளிநாட்டு பைக்குகளின் மோகம் அதிகரித்து வருகிறது. இதற்கு நடிகர்கள் மட்டும் விதிவிலக்கில்லை. அந்த வகையில் நேற்று திடீரென பிம்டபிள்யூ ஷோரூமுக்கு சென்ற நடிகர் சிம்பு, அங்குள்ள பைக்குகளை எடுத்து டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். சிம்பு வாங்க விரும்பிய இந்த பைக்கின் விலை மட்டும் ரூ. 18 லட்சத்தைத் தாண்டும்.

இதுகுறித்து சிம்புவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறும் போது சிம்பு, பிம்டபிள்யூ கார் வாங்கத்தான் ஷோரூமுக்கு சென்றதாகவும், அங்கிருந்த பைக்குகள் அவரை கவர்ந்ததனால் டெஸ்ட் டிரைவ் செய்ததாகவும் கூறியுள்ளனர். ஒருவேளை, சிம்பு விரைவில் பிம்டபிள்யூ பைக்கில் வலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும் படிக்க