• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாதனை படைத்த சர்கார் டீஸர் !

October 20, 2018 தண்டோரா குழு

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய்,கீர்த்தி சுரேஷ்,வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,பழ.கருப்பையா,யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியான நல்ல வரவேற்பை பெற்றது.இதற்கிடையில்,இந்த படத்தின் டீசர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.அதன்படி தற்போது இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டீசரை பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய் செம மாஸ் அண்ட் கிளாஸாக இருப்பதாக கூறி வருகின்றனர்.அதற்கு ஏற்ப விஜயின் அதிரடி சண்டை காட்சிகளும் நான் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் என்று சொல்லும் அதிரடி வசனங்களும்
டீசரில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து,இந்த டீசரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் டீஸர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான முறை டீஸர் பார்க்கப்பட்டது.அத்துடன்,20 நிமிடங்களில் 20 லட்சம் பார்வை,35 நிமிடங்களில் 30 லட்சம் பார்வை என நேரம் போகப்போக அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.இந்த டீஸர் வெளியான 35 நிமிடத்தில் 3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க