• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் 2.0 படம் விரைவில் வெளியிடப்படும் – தமிழ் ராக்கர்ஸ்

November 9, 2018 தண்டோரா குழு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன்.இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது.இந்த படத்தில் எமி ஜாக்‌ஷன்,அக்‌ஷய் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில்,திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் 2.0 திரைப்படம் விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே,விஜய்யின் சர்கார் படத்தையும் சொன்னபடி முதல் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க