• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்ரமின் அடுத்த வில்லன் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்

February 12, 2017 tamilsamayam.com

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள திரைப்படத்தில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்கு இப்போது வரை டைட்டில் வைக்கப்படவில்லை.இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமிற்கு வில்லனாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ‘தாரை தப்பட்டை’ மற்றும் ‘மருது’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ள ஆர்.கே சுரேஷ்,அவரின் வில்லன் நடிப்பிற்காக பாராட்டுகளை பெற்றார்.இவர் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட தர்ம துரை மற்றும் சலீம் ஆகிய படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

வட சென்னையில் வசிக்கும் ஒரு ரவுடியின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டு,படம் எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக வட சென்னை பகுதிகள் போன்ற செட் போடப்பட்டு,படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா,காமெடி நடிகர் சூரி ஆகியோர் நடிக்க உள்ளனர்.தமன் இசையமைக்கிறார்.துருவ நட்சத்திரம் மற்றும் விஜய் சந்தரின் படம் என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க