May 15, 2018
தண்டோரா குழு
பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ.சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ்,அருண் விஜய்,ஏமி ஜாக்சன்,மந்த்ரா பேடி, ஜாக்கி ஷராப்,லால்,மகேஷ் மஞ்ரேக்கர்,சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி,பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ்,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில்,அருண் விஜய்யும் தற்போது இணைந்திருக்கிறார்.