• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீடு சர்ச்சையில் சிக்கிய சிம்பு ?

October 22, 2018 தண்டோரா குழு

மீடு என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக புகார் கூறி வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட்டில் துவங்கிய இந்த மீடு தற்போது கோலிவுட்டிற்கும் வந்துள்ளது.பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது அடுத்தடுத்து பாலியல் புகார் கூறி வருகிறார்.தற்போது நடிகர்கள் அர்ஜுன்,தியாகராஜன்,ஜான் விஜய்,இயக்குநர் சுசி கணேசன் ஆகியோர் மீடு சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஜெயம் கொண்டான்,கெட்டவன் ஆகிய படங்களில் நடித்திருந்த லேகா வாஷிங்டனும் தன் ட்விட்டர் பக்கத்தில் ‘மீடூ’ குறித்து பதிவிட்டுள்ளார். அதில்… “One word : Kettavan. #metoo” என்று குறிப்பிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் கெட்டவன் படத்தை சிம்பு – லேகா வாஷிங்டன் இணைந்து நடிப்பதாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.அந்தவகையில் நடிகை லேகா வாஷிங்டன் இந்த படத்தின் போது ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து ‘மீடூ’ வில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும்,அவர் சிம்புவை குறித்து புகார் கூறியுள்ளாரா…? அல்லது ‘கெட்டவன்’ படக்குழுவில் இருந்த வேறு யார் மீதாவது புகார் கூறியுள்ளாரா என்று தெளிவாக பதிவிடாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியும்,கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க