• Download mobile app
25 Oct 2025, SaturdayEdition - 3545
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“காலா” படத்தில் அம்பேத்கராக நடிக்கிறாரா மம்முட்டி?

June 3, 2017 tamilsamayam.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படத்தில், அம்பேத்கர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘காலா’ திரைப்படத்தில், மும்பையில் உள்ள குடிசைப்பகுதி வாசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் கெளரவ தோற்றத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், BR 1956 என டாக்டர்.அம்பேத்கரின் பெயரும், அவர் மறைந்த ஆண்டு குறித்தும் மறைமுகமான குறியீடு இடம்பெற்றுள்ளதாக பலரும் தெரிவித்திருந்தனர். தலித் மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து தனது படங்களில் பா.ரஞ்சித் பிரதிபலிப்பதால், அம்பேத்கர் கதாபாத்திரம் கண்டிப்பாக காலா படத்தில் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் என தமிழ் திரையுலகினர் கூறுகின்றனர்.

ஏற்கனவே டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் குறித்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில், அம்பேத்கர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க