பிக் பாஸ் 1 நிகழச்சி மூலம் பிரலமான ஹரிஷ் கல்யாண் – ரைஸா கூட்டணியில் வெளியான பியார் பிரேமா காதல் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அந்த வகையில் ‘பிக் பாஸ்’ சீசன் 2-வுக்கு பிறகு நடிகர் மஹத் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த்,நடிகை ஐஸ்வர்யா ஆகியோருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது.இதையடுத்து,நடிகர் மஹத் மற்றும் நடிகை ஐஸ்வர்யா இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.
இதற்கிடையில்,தற்போது மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.அறிமுக இயக்குநர்கள் மகேஷ் – வெங்கடேஷ் இணைந்து இயக்கும் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை.இப்படம் ஒரே நேரத்தில் தமிழ்,கன்னடம் என இரண்டு மொழிகளில் தயாராகவுள்ளது.இதில் முக்கிய வேடங்களில் ராமதாஸ்,மா.கா.பா.ஆனந்த் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில்,இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது.ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது.தற்போது ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.’பிக்பாஸ்’ இரண்டாவது சீசனில் பங்கேற்ற மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் இணைந்து ரொமான்டிக் காமெடி கலந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம்.சி இயக்குகிறார்.இவர் ஹாலிவுட் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.மேலும்,இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விபரம் விரைவில் வெளியாக உள்ளது.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்