• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவுக்கு வெள்ள நிவராண நிதியாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி

August 18, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர்.50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.அந்தவகையில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் நடிகர்கள் கமல்,விஷால்,கார்த்தி,சூர்யா,விஜய்சேதுபதி,தனுஷ்,சித்தார்த் மற்றும் நடிகைகள் ரோஹிணி,ஸ்ரீபிரியா,நயன்தாரா உள்ளிட்ட பலர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

இந்நிலையில்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக முதல்வர் வெள்ள நிவாரணநிதிக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

மேலும் படிக்க