August 21, 2018
தண்டோரா குழு
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கும் முதல் படம் ‘கனா’.
மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில்,இப்படத்தின் டீசர் மற்றும் இசையை ஆகஸ்ட் 23ம் தேதி வெளியிட இருப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,தற்போது கனா படத்தின் பாடல்களை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகவும் பிரபலமான ஸ்மிரிதி மந்தனா வெளியிட இருக்கிறார் என்பதை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.