• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்லோரும் என்னை ஜூலி என்று சொல்லி விட்டீர்கள் – வைஷ்ணவிஆதாங்கம்

August 10, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மமதி,ஷாரிக்,அனந்த் வைத்தியநாதன்,நித்யா உள்ளிட்ட 5 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது,பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளின் மூலமாக ஒவ்வொருவரின் உண்மை முகமும் வெளிவரத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் இன்று நிகழ்ச்சிக்குழுவினர் 2 புரமோ வீடியோக்களை இதுவரை வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் முதல் புரோமோவில்,நடிகர் ஹரிஷ் கல்யாண்,ரைசா,பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தருகிறார்கள்.அப்போது,நடிகர் ஹரிஷ் கல்யாண் யாஷிகா,மஹத் இடையிலான நட்பு,நட்பையும் தாண்டி புனிதமானது என்று மஹத் கூற அதற்கு பெரும்பாலானோர் ஆம் என்று பதிலளிக்கின்றனர்.ஆனால் மஹத் மட்டும் இல்லை என்கிறார்.இதனால் யாஷிகா வருந்துகிறார்.யாஷிகாவிற்கு நடிகை மும்தாஜ் ஆறுதல் வார்த்தை கூறுகிறார்.

இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில்,நடிகை மும்தாஜ் வைஷ்ணவியின் செயல்பாடுகளை விவரிக்கிறார்.அப்போது ஜூலி செய்த காரியத்தை மும்தாஜ் நினைவு கூர்ந்து பேசினார்.இதனைக்கேட்டுக் கொண்டிருந்த வைஷ்ணவி என்னை எல்லோரும் ஜூலி என்று சொல்லி விட்டீர்கள் என்று ஆதங்கப்படுகிறார்.

மேலும் படிக்க