• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் பற்றிய புதிய தகவல்..!

October 23, 2018 தண்டோரா குழு

லிங்குசாமி இயக்கத்தில்,மறைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதாவின் வாழ்க்கை வர‌லாறு திரைப்படம் உருவாக உள்ளதாக திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க இயக்குனர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.ஆரம்பத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.இதனை ‘Vibriமீடியா’ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அதைபோல்,மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் பயோ பிக்கை இயக்கவிருக்கிறார்.‘The Iron Lady’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதனை ‘பேப்பர் டேல் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2019) ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளனர்.

இந்நிலையில்,பிரபல இயக்குநர் லிங்குசாமியும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கவுள்ளராம்.இந்த தகவலை திவாகரன் மகன் ஜெயானந்த் தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,

“அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர் எனது நண்பர் திரு.லிங்குசாமி அவர்களால் படமாக்கப்படும்.இதில் நடராஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்”. என கூறியுள்ளார்.

மேலும் படிக்க