• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மும்பை தாதா ஹாஜி மஸ்தான் கதையில் சூப்பர்ஸ்டார்?

April 21, 2017 tamilsamayam.com

‘கபாலி’ வெற்றியைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் இணையும் புதுப்படம் மும்பையை கலக்கிய தாதா மிர்ஸா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இருக்கலாம் என கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, இயக்குனர் பா.ரஞ்சித் தெற்கு மும்பை பகுதியில் படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இதனால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 161’ திரைப்படம், கடந்த 1926-1994 இடைப்பட்ட காலத்தில் மும்பை துறைமுகத்தை கட்டுக்குள் வைத்து கடத்தல் மன்னராக விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்று கதை என கூறப்படுகிறது. ஹாஜி மஸ்தான் மும்பையில் வாழ்ந்த தமிழக மக்களின் நலனுக்காக போராடியவர்.

மக்கள் தலைவராக பார்க்கப்பட்ட ஹாஜி மஸ்தான் சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்பவராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் வலம் வந்தவர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜி பாய் சரளமாக தமிழ் பேசினாலும்,திக்கி திக்கி ஹிந்தி பேசுவாராம். வெள்ளை நிற ஆடை, வெள்ளை நிற மெர்சிடிஸ் கார், விலையுயர்ந்த சிகரெட்டுகள் என கேங்ஸ்டர் அவதாரத்துக்கு புதிய ஸ்டைலை உருவாக்கியவர். இதன் காரணமாகவே மக்கள் மத்தியில் ஸ்டைல் மன்னனாக போற்றப்பட்டவர்.

அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்நமது ஸ்டைல் மன்னன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹாஜி மஸ்தானாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘ஒன்ஸ் அபான் அ டைம்’ ஹிந்திப் படம், அமிதாப்பச்சன் நடித்த ‘தீவார்’ படமும் ஹாஜி மஸ்தானை மையமாகக் கொண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க