September 12, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட்டில் கால்பதித்து தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.தனுஷ் ஹாலிவுட்டில் நடித்த படம் ‘தி எக்ஸ்டராடினரி ஜர்னி ஆப் தி பகிர்.இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த படத்திற்கு சர்வதேச அளவில் ஒரு விருது கிடைத்துள்ளது.
நார்வே நாட்டில் ஹாகசண்டில் நார்வே சர்வேதேச திரைப்பட விழா நடந்து வருகிறது.இவ்விழாவில் பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்விழாவில் தனுஷ் நடித்த’தி எக்ஸ்டராடினரி ஜர்னி ஆப் தி பகிர் படமும் திரையிடப்பட்டது.இப்படம் ‘ரே ஆப் சன்ஷைன்’ என்னும் விருதிற்கு தேர்வாகியுள்ளது.இதனை அறிந்த தனுஷ் ரசிகர்கள் இதனை பெருமளவில் கொண்டாடி வருகிறார்கள்.