November 3, 2017
tamilsamayam.com
மோகன்லால் நடிக்க வேண்டிய படத்தில் தற்போது நடிகர் மம்முட்டி நடிக்கவுள்ளார்.
நடிகர் மோகன்லால் நடிப்பதாக பல வருடமாக சொல்லப்பட்டு வந்த வரலாற்று படம் ‘குஞ்சாலி மரைக்காயர்’. தற்போது இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். ஏற்கனவே வாஸ்கோடகாமா வரலாற்று பின்னணியில் ‘உருமி’ படத்தை இயக்கிய சந்தோஷ் சிவன், அதே காலகட்டத்தில் வாழ்ந்த இந்த ‘குஞ்சாலி மரைக்காயர்’ வரலாற்றை படமாக்குவது பெருமைக்குரிய விஷயம்தான்.