November 21, 2018
தண்டோரா குழு
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,மின்சாரக் கனவு படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாள மயம்.இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றிருக்கின்றன.இதற்கிடையில்,இப்படம் 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.அதேசமயம்,ராஜீவ் மேனனுக்கு நெருக்கமான திரைத்துறை நண்பர்களுக்கு படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சர்வம் தாளமயம்வருகின்ற டிசம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.