January 3, 2018
kalakkalcinema.com
திரையுலக பிரபலங்கள் பற்றிய வதந்திகள் தற்போதெல்லாம் அதிகம் பரவத் தொடங்கி விட்டன, இதற்கு முக்கிய அடித்தளமே இணையத்தளங்களாக அமைந்து விட்டன.
இந்நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்து அவர்கள் நான் பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் கூறாததை சிலர் கூறியதாக தகவல்களை வெளியிடுகின்றனர். அந்த தகவல்கள் உண்மை என கருதி விடும் அபாயமும் உண்டு என கூறியுள்ளார்.
இதையெல்லாம் செய்பவர்களின் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை, அவர்கள் நகைச்சுவையாக கூட செய்திருக்கலாம். ஆனால் நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு. அது உங்களுக்கும் தெரிந்திருக்கும் மக்களுக்கும் புரிந்திருக்கும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.