• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி நினைவிடத்தில் அதிகாலையில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

August 13, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அதிகாலை அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வரும்,திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.பின்னர் அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.இதனையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்,முக்கிய பிரபலங்கள்,திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,கருணாநிதியின் மறைவின் போது சர்க்கார் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் இருந்த நடிகர் விஜய் ஷூட்டிங் முடிந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை திரும்பினார்.பின்னர் விமானநிலையத்திலிருந்து நேராக திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் விஜய் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது நேரில் சென்று தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க