October 22, 2018
தண்டோரா குழு
இயக்குனர் சுசீந்திரன் தற்போது ஜீனியஸ் ஏஞ்சலினா,சாம்பியன் போன்ற படங்களை இயக்கி வருகிறார்.இதில்,ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக “கென்னடி கிளப்” என்ற படத்தை இயக்கவுள்ளார்.கலை சேகர்.B. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகவுள்ளது.இப்படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா,சூரி,முனீஸ் காந்த்,மீனாட்சி,காயத்ரி,நீது,சௌமியா,ஸிம்ரிதி,சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.இதில் படத்தில் நடிக்கும் நடிகர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.பழனியை கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.