• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரைப்பட இயக்குநர் மணிரத்னத்திற்கு திடீர் மாரடைப்பு: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

July 26, 2018 தண்டோரா குழு

பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பிரபல இயக்குராக கருதப்படுவர் இயக்குநர் மணிரத்னம்.தமிழ்,இந்தி,தெலுங்கு உள்ளிட்ட மொழி பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.தற்போது சிம்பு,விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி,அருண் விஜய்,ஜோதிகா உள்ளிட்டோரை வைத்து செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் ராவணன் படத்தின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார். இதன்பின்னர்,கடந்த 2015ம் ஆண்டில் ஓகாதல்கண்மணி படத்தின் ரிலீசுக்கு பிறகு நெஞ்சுவலி ஏற்பட்ட போது டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார்.தற்போது 3-வது முறையாக அவர் நெஞ்சுவலியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும்,வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க