• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷை வைத்து அதிக படங்கள் இயக்குவது ஏன் ?- வெற்றிமாறன்

தண்டோரா குழு
July 31, 2018

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த முதல் படம் பொல்லாதவன்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.அதன்பின் இருவரும்’ஆடுகளம்’ படத்தில் மீண்டும் இணைந்தனர். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்று தேசிய விருதையும் பெற்றது.

தற்போது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி’வட சென்னை’ படத்திற்காக மூன்றாவது முறையாக இணைத்துள்ளது.தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்,அமீர்,கிஷோர்,சமுத்திரக்கனி,டேனியல் பாலாஜி,பவன்,ராதாரவி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.

மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று மிகுந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கிறது.

இந்நிலையில்,அண்மையில் இயக்குனர் வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் “அதிகமாக தனுஷை வைத்தே படம் இயக்குவது எதனால்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர்,”இந்த மாதிரி இடங்களில் நான் பதில் சொல்லக் கூடாது.இருந்தாலும் சொல்றேன்.தனுஷ் தான் கதை கேட்காமல் நடிக்கிறார்” என பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க