• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பீட்டாவிடமிருந்து விருது வாங்கியதை அவமானமாக கருதிகிறேன்

January 20, 2017 tamilsamayam.com

சில ஆண்டுகளுக்கு முன்னர் பீட்டாவிடமிருந்து நான் விருது வாங்கியது உண்மை தான். அதை தற்போது நான் அவமானமாகக் கருதுகிறேன்” என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் சைவ உணவு மட்டும் சாப்பிடுகிறார் என்பதைப் பாராட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டா அமைப்பு அவருக்கு விருது வழங்கி பாராட்டியது. மேலும், இவர் இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இதை சமீபத்தில் தனுஷ் மறுத்து இருந்தார். இந்நிலையில் தற்போது தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள நடிகர்கள் சங்கத்தில் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, அஜித், நடிகை த்ரிஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தனுஷ், ”உலக மக்கள் ஆடு, மாடுகளை கால்நடை என்றழைக்கும்போது, தமிழன் கால்நடைச் செல்வம் என்று அழைத்து வருகிறான். இதைப் பார்த்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் விழா நிறைவு பெறாது. உலகம் முழுக்க வாழும் 12 கோடி தமிழர்களின் உணர்வை மதித்து பிரதமர் அவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும்.

நானோ எனது குடும்பத்தில் யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் பீட்டாவிடமிருந்து நான் விருது வாங்கியது உண்மை தான். அதை தற்போது நான் அவமானமாகக் கருதுகிறேன்” என்றார்.

மேலும் படிக்க