November 24, 2017
தண்டோரா குழு
நடிகரும் இயக்குனருமான சசிக்குமாரின் உறவினர் தயாரிப்பாளர் அசோக் குமார் அன்புச்செழியனின் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் அன்புச்செழியன் மீது அனைவரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில், இயக்குனர் சீனு ராமசாமி அன்புச்செழியனின் உத்தமன் என்று டுவிட் செய்து இருந்தார். அதைபோல் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அன்புச்செழியனினுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில்,அன்புச்செழியன் நடிகை தேவயானிக்கு பைனான்ஸ் கொடுத்து அந்த பணத்தை வாங்க மிரட்டியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனை மறுத்த நடிகை தேவயானி பைனான்சியர் அன்புச்செழியன் நைஸ் மேன் எனவும், ஜென்டில் மேன் எனவும் காதலுடன் படத்திற்காக பைனான்ஸ் வாங்கிய போது தன்னை அன்புச்செழியன் மிரட்டியதாக வெளியான தகவல் பொய் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அன்புச்செழியனிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு தப்பிப்பதற்கும் தேவயானி மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை எல்லாம் மறுத்து தேவயானி தற்போது பேட்டி கொடுத்துள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் ஆண்டனியை தொடர்ந்து தற்போது நடிகை தேவயானி அன்புச்செழியனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.