• Download mobile app
27 Oct 2025, MondayEdition - 3547
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை டிரஸ் பற்றி யோசிக்காம கதை பற்றி யோசிங்க

January 2, 2017 tamil.samayam.com

கத்தி சண்டை பட இயக்குனர் சுராஜ் தெரிவித்த கருத்துக்கு ‘டி-வி’ ஆங்கர் டி.டி., கடுமையாக பதில் அளித்துள்ளார்.

கத்திச் சண்டை பட இயக்குனர் சுராஜ் சமீபத்தில் பங்கேற்ற பேட்டியில் “கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் தங்களின் ஆடையை குறைத்துதான் நடிக்க வேண்டும்.
திறமையை காட்ட சீரியலில் நடிக்கட்டும்” என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

நயன்தாரா, தமன்னா. விஷால் ஆகியோர் சுராஜ் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் வேறு வழியில்லாமல் சுராஜ் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் டி-வி ஆங்கர் திவ்யதர்ஷினி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,’ சுராஜின் பேட்டி வருத்தமளிக்கிறது. பெண்களுக்காக குரல்கொடுத்த நயன்தாரா, தமன்னா, விசால் ஆகியோருக்கு நன்றி. இயக்குனர் சுராஜ், நடிகைகளின் டிரஸ்சை குறைப்பது எப்படி என்பதை யோசிப்பதை விட நல்ல கதையை யோசிக்கலாம். என அதில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க