December 8, 2017
tamilsamayam.com
விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஓவியாவுக்குப் பதில் ஜூலி தங்கையாக நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத்சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றுகிறார். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையக்கவுள்ளார்.
மேலும்,இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகை ஓவியாவை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், படத்தில் தனக்கு ஹீரோயின் வேடம் இல்லையென்றதும் ஓவியா நடிக்க மறுத்துவிட்டாராம். எனவே, அவருக்குப் பதில் ஜூலியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலி ஏற்கெனவே விமலுடன் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.