• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியிடம் மன்னிப்பு கேட்ட நித்யா

August 30, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தார் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள்.

அந்த வகையில் இதுவரை மும்தாஜ்,ஐஸ்வர்யா,ஜனனி,யாஷிகா ஆகியோரது பெற்றோர்கள் வந்திருந்தனர்.பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தாடி பாலாஜியும்,அவரது நித்யாவும் சில பிரச்சனைகளால் பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்நிலையில் தான் இருவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.எனினும் நித்யா எவிக்ட் ஆகிவிட்டார்,பாலாஜி இன்னும் பிக் பாஸ் வீட்டில் உள்ளார்.இதனால் பாலாஜியை சந்திக்க நித்யா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால்,நித்யா பாலாஜிக்கு ஒரு கடிதம் எழுதியருந்தார்.அதில் புறம் பேசாதே என்று அறிவுரை கூறியதுடன் நட்பு ரீதியாகவே கடிதம் எழுதியதாக தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.அவர் கடிதத்தில் ஃபிரெண்ட் அன்ட் ஃபிரெண்ட் ஒன்லி என்று எழுதியிருந்ததை பார்த்த பாலாஜி ஓரமாக போய் உட்கார்ந்து அழுதார்.

இந்நிலையில்,இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோவை பிக் பாஸ் குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.அதில்,நித்யா பிக்பாஸ் வீட்டிற்கு தனது மகள் போர்ஷிகாவுடன் வந்து தன் கடித்ததால் பாலாஜியை அழ வைத்ததற்காக பாலாஜியிடம் அழுதுக் கொண்டே மன்னிப்பு கேட்கிறார்.இந்த 9 ஆண்டுகளில் நீ அழுது நான் பார்த்ததே இல்லை என்று கூறி கண் கலங்கியுள்ளார்.

பாலாஜியும்,நித்யாவும் கட்டிப்பிடித்து பாசமாக பேசியதை பார்த்த சக போட்டியாளர்களுக்கு அவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றே சொல்லலாம்.பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததே நித்யாவுடன் மீண்டும் சேர வேண்டும் என்ற ஆசையில் தான் என பாலாஜி தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க