• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன் சாதனையை தானே முறியடித்துள்ள இளையதளபதி

January 7, 2017 tamil.samayam.com

விஜய் நடித்த திரைப்படங்களில் முதன்முறையாக ‘பைரவா’ திரைப்படம் தமிழகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’பைரவா’ திரைப்படம் வரும் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக உள்ளது.’தெறி’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் என்பதால்,பைரவாவிற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.மேலும் டீசர்,டிரைலர் என பல்வேறு விதங்களிலும் பைரவா திரைப்படம் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் மற்றொரு மைல் கல்லாக இதுவரை விஜய் நடித்துள்ள எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவு,தமிழகம் முழுவதும் 450 திரையரங்கங்களில் பைரவா திரைப்படம் ரிலீஸாக உள்ளது.இந்த தகவலை பைரவா படத்தின் விநியோகஸ்தரான ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் பொங்கலுக்கு வேறு எந்த முக்கிய நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் பைரவா படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதாகவும்,அதனால் இந்த முறை அதிக திரையரங்குகளில் பைரவா ரிலீஸாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க