• Download mobile app
10 Jan 2026, SaturdayEdition - 3622
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

Bachelorனா ஜம்முனு இருக்கலாம் – ஹர்பஜன்சிங் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

September 11, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ் குமார். கடந்த வாரம் இவரது நடிப்பில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் தனது புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க, கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல மாடல் திவ்யபாரதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆக்‌ஷன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பேச்சுலர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்டார்.

ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,

கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்…கமிட் ஆனா உம்முனு இருக்கனும்.. Bachelorனா ஜம்முனு இருக்கலாம்… ! #Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க