November 1, 2017
tamil.samayam.com
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்தின் மூலம் நல்ல மார்கெட்டைப் பெற்ற எமி ஜாக்சனுக்கு, இந்தப் படத்தின் மூலம் மேலும் பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி, ஹாலிவுட் படத்திலும், சூப்பர் கேர்ள் என்ற ஆங்கில டிவி சீரியலிலும் நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார்- சுதீப் நடிக்கும் ‘தி வில்லன்’ படத்தில் முக்கிய கதாநாயகியாக நடிக்கிறார்.
இதனால் அவர் மிகவும் பிசியாக இருக்கிறார். இதனையடுத்து, அவர் நடிப்பதாக இருந்த குயின் படத்தின் கன்னட ரீமேக்கிலிருந்து வெளியேறி உள்ளார்.