August 23, 2018
தண்டோரா குழு
நடிகர் அஜித்குமார் நடிக்கும் “விஸ்வாசம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.வீரம்,வேதாளம்,விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சிவா– அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.மேலும்,இப்படத்தில் விவேக்,யோகி பாபு,தம்பி ராமைய்யா,ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.டி.இமான் முதல் முறையாக இந்த படத்தின் மூலம் அஜித் படத்திற்கு இசையமைக்கின்றார்.
இந்நிலையில்,இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.இதில் அப்பா-மகன் என அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பது போல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.விஸ்வாசம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.