• Download mobile app
12 Mar 2026, ThursdayEdition - 3683
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் அடுத்த படம் `பிங்க்’ ரீமேக்கா?- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் வினோத்

November 15, 2018 தண்டோரா குழு

நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை மற்றும் தீரன் ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தினை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.

இப்படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகின.இதற்கிடையில்,தல 59 படம் பிங்க் படத்தின் ரீமேக் இல்லை என இயக்குனர் வினோத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்,இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக இயக்குநர் வினோத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,என்னுடைய அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு எதுவாயினும்,அது நிச்சயம் தயாரிப்பாளர் தரப்பில் வெளியிடப்படும்.அதுவுமல்லாமல்,ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட எந்தச் சமூக வலைதளத்திலும் எனக்குக் கணக்குகள் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும்,இப்படம் `பிங்க்’ படத்தின் ரீமேக்கா என்பது குறித்து ஹெச்.வினோத் எதுவும் குறிப்பிடவில்லை.இதனால் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க