• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இவாங்காவிற்கு சமந்தா அளிக்கப் போகும் ஆச்சர்யப் பரிசு!

November 29, 2017 tamilsamayam.com

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா, தொழில் முனைவோருக்கான சர்வதேச மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.

இதற்காக நேற்று ஹைதராபாத் வந்த இவாங்கா நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன்பின் அவருக்கு மோடி சிறப்பு விருந்து அளித்தார்.

இதனையடுத்து, இன்று அவர் மீண்டும் அமெரிக்கா திரும்புவதாக வெள்ளை மாளிகை தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஹைதராபாத் வந்துள்ள இவாங்கா ட்ரம்பிற்கு பல்வேறு பரிசுப்பொருட்களை வழங்க தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. அதில், தெலுங்கானாவின் கைத்தறி பொருட்களும் அடங்கும்.

அதன்படி, அம்மாநிலத்தின் கைத்தறி பொருட்களின் தூதுவராக இருக்கும் சமந்தா அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நடிகை சமந்தா இவங்காவிற்காக பிரத்யேகமான, தெலுங்கானாவின் பிரசித்திபெற்ற கோலபாமா புடவையைத் தேர்வு செய்துள்ளார்.

மேலும் படிக்க