தமிழ்,தெலுங்கு என இருமொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.மதுரையில் நேற்று நடந்த தனியார் கைபேசி நிறுவனம் ஒன்றின் தொடக்க விழாவில் நடிகை சமந்தா கலந்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
“ரொம்ப சந்தோஷமா இருக்கு.எனக்கு மதுரை மக்களின் பாசம் பிடிக்கும்.ரசிகர்கள் தான் என்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றியையும் தீர்மானிக்கின்றனர் என்று கூறினார்.அப்போது,அவரிடம் செய்தியாளர்கள்,நடிகைகள் ஸ்ரீரெட்டி,தனுஸ்ரீ மற்றும் கங்கனா என பலர் தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பற்றி பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது குறித்து கருத்து கேட்டனர்.
இதற்கு பதிலளித்த நடிகை சமந்தா,நான் 10 வருடமாக சினிமாவில் இருந்துவிட்டேன்.சினிமாவிலிருக்கும் நடிகர் ஒருவரைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். கடவுளைப்போல் சினிமாவை மதிக்கிறேன்.என்னுடைய கேரியரில் எனக்கு எந்தவிதமான பாலியல் தொல்லைகளும் நடைபெற்றதில்லை.எல்லாத் துறைகளையும் போல திரைத்துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் துறையின் பெயர் கெடுகிறது” என்றுக் கூறியுள்ளார்.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்