• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது!

October 25, 2017 tamilsamayam.com

நடிகை அசின் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா ஜோடிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது.

மலையாளம், தெலுங்கு திரை உலகில் ஒருசில படங்களில் நடித்த அசின், தமிழில் கடந்த 2004ல் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானார். பின் விஜய்யுடன் சிவகாசி,போக்கிரி, அஜீத்துடன் வரலாறு, உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சூர்யாவுடன் நடித்த கஜினி படத்தின் இந்தி ரீமேக் படத்திலும் நடித்து இந்தி திரை உலகிலும் பிரபலமானார்.

இந்நிலையில் நடிகை அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனரான ராகுல் சர்மாவுக்கும் டெல்லியில் கடந்த 2016 ஜனவரியில் திருமணம் நடந்தது. கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்தது.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்திற்கு அழைக்கபட்டனர். இந்நிலையில் அசின், ராகுல் ஜோடிக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க