• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்பா வழியில் மகள்,தொகுப்பாளினியாக மாறிய ஸ்ருதிஹாசன் !

October 22, 2018 தண்டோரா குழு

சமீபகாலமாக வெள்ளித்திரை முன்னணி நடிகர்கள் பலர் சின்னத்திரைக்கு படையெடுத்து வருகின்றனர்.நடிகரும்,மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல், விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன்1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.அவரைத் தொடர்ந்து நடிகர் விஷால்,சன் டிவியில் ‘நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இவரைப் போலவே ஜெயா டிவியில் வரலட்சுமியும்தொகுப்பாளராகி இருக்கின்றார்.அந்த வரிசையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் இணைத்துள்ளார்.

தற்போது இந்தி படமொன்றில் மட்டுமே ஸ்ருதி நடித்து வரும் ஸ்ருதிஹாசன்,தமிழில் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை.இந்நிலையில்,நடிகை ஸ்ருதிஹாசன் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராகி இருக்கிறார்.இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

இதன் முதல் நிகழ்ச்சியில் வரவுள்ள பிரபலம் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.ஸ்ருதி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் கலர்புல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க