• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்!

October 20, 2018 தண்டோரா குழு

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள்,குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் தற்போது இந்தியாவில் டிரெண்டாகி வருகிறது.

தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.எனினும் இந்த குற்றச்சாட்டினை சட்டப்பூர்வமாக எதிர்க்கொள்ள தயாராக உள்ளதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் ராதாரவி,நடன இயக்குநர் கல்யாண்,பிரபல பாடகர் கார்த்திக்,இயக்குநர் சுசிகணேசன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தற்போது இந்த பட்டியலில் நடிகர் அர்ஜூன் இணைந்துள்ளார்.அவர் மீது பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

நடிகர் அர்ஜூன் உடன் ‘விஸ்மயா’ என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.மேலும்,இந்த புகாருக்கு இதுவரை நடிகர் அர்ஜூன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க